3 புதிய குற்றவியல் சட்டங்கள்; மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது..உச்சநீதிமன்றம் கருத்து!

DMK Government Of India Madras High Court
By Swetha Jul 19, 2024 07:02 AM GMT
Report

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

குற்றவியல் சட்டம்

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்சய சட்டம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களும் கடந்த ஆண்டு டிசம்பரில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டங்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது.

3 புதிய குற்றவியல் சட்டங்கள்; மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது..உச்சநீதிமன்றம் கருத்து! | New Laws Will Make People Confuse Says High Court

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக இந்த புதிய சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்த மூன்று சட்டங்களிலும் பல புதுமையான யோசனைகள் உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு

வரும் ஜூலை மாதம் முதல் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த 3 சட்டங்களுக்கு எதிர்ப்பு - மத்திய உள்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இந்த 3 சட்டங்களுக்கு எதிர்ப்பு - மத்திய உள்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

குழப்பத்தில் ஆழ்த்தும்..

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை “பாரதிய நியாய சன்ஹிதா 2023”, “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023” மற்றும் “பாரதிய சாக்ஷியா சட்டம் 2023” என மாற்றப்பட்டு,

3 புதிய குற்றவியல் சட்டங்கள்; மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது..உச்சநீதிமன்றம் கருத்து! | New Laws Will Make People Confuse Says High Court

1-7-2024 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனை எதிர்த்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வலக்கை அதில், நாடாளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும்,

மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும் இந்த சட்டங்கள் அவசர கதியில் அமல்படுத்தப்பட்டுள்ளதால், இவை சட்டவிரோதமானது, தன்னிச்சையானது என்று அறிவிக்க வேண்டும்.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்

உச்சநீதிமன்றம் 

என்ற சூழலில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் இந்த சட்டங்களை நிறைவேற்றியிருப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை எஸ்.எஸ். சுந்தர், செந்தில் குமார் ஆகியோர் முன் விசரணைக்கு வந்தது.

3 புதிய குற்றவியல் சட்டங்கள்; மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது..உச்சநீதிமன்றம் கருத்து! | New Laws Will Make People Confuse Says High Court

மனுதாரர் தரப்பில், “எந்த விவாதமும் இல்லாமல் இந்த சட்டங்கள் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசியலமைப்பு பிரிவு 348-ன் படி அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில் மட்டும்தான் இயற்றப்பட வேண்டும்.சமஸ்கிருதத்தில் சட்டங்களை இயற்றியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, ” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. சட்டங்களை கொண்டு வரும் முன் சட்ட ஆணையத்தை ஆலோசித்து இருக்க வேண்டும். புதிய குற்றவியல் சட்டங்களை தொடர்பாக 4 வாரத்தில் ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும், “இவ்வாறு தெரிவித்தனர்.