உணவு வாங்கி தர சொன்ன அதிகாரி..மறுத்த பெண் பணி நீக்கம் - இறுதியில் ட்விஸ்ட்!

China World Social Media
By Swetha Sep 27, 2024 01:00 PM GMT
Report

உணவை வாங்கி வர மறுப்பு தெரிவித்த பெண் உடனே பணி நீக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

பெண் 

சீனாவின் ஷாங்காயில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் லூ என்ற பெண் புதிதாக பணிக்கு சேர்ந்துள்ளார். இவர் பணிக்கு சேர்ந்த தினம் முதல் தினந்தோறும் காலையில் தன் முதலாளிக்கு சூடான அமெரிக்கானோவுடன் (காப்பி),

உணவு வாங்கி தர சொன்ன அதிகாரி..மறுத்த பெண் பணி நீக்கம் - இறுதியில் ட்விஸ்ட்! | New Joinee Fired For Not Buying Breakfast For Boss

முட்டை மற்றும் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி செல்ல கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். ஒரு நாள் அதை செய்ய லூ மறுக்கவே உடனடியாக அவர் பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து லூ தனது சமூக வலைத்தளப்பத்தில் மிகுந்த மன வருத்தத்துடன் பகிர்ந்திருந்தார். அதில், “எனது முதலாளி அவருக்கு காலை உணவை வாங்கச் சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார். முடியாது என்றுகூறி நான் மறுத்ததால், பணி நீக்கம் செய்யப்பட்டேன்.

1000 மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் பணி நீக்கம் - நடந்தது என்ன?

1000 மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் பணி நீக்கம் - நடந்தது என்ன?

பணி நீக்கம்

ஏதோ ஒருநாள் மட்டும் காலை உணவை வாங்கி வர நிர்பந்திக்கப்படவில்லை. தினந்தோறும் காலை உணவை வாங்கி வர வேண்டும் என்று முதலாளியால் கட்டாயப்படுத்தப்பட்டேன்” என தெரிவித்துள்ளார்.

உணவு வாங்கி தர சொன்ன அதிகாரி..மறுத்த பெண் பணி நீக்கம் - இறுதியில் ட்விஸ்ட்! | New Joinee Fired For Not Buying Breakfast For Boss

மேலும், இது குறித்து HR department யிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத எச்ஆர் டிபார்ட்மெண்ட், இழப்பீடு தொகை எதுவும் கொடுக்க முடியாது எனவும், உடனடியாக பணியிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிட்டதாக தனது பதிவில் லூ தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு வைரலான நிலையில் “இதுகுறித்து கம்பெனியிடம் விசாரிக்க வேண்டும்” என நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம்,

உணவை கொண்டுவர கட்டாயப்படுத்திய உயரதிகாரி லியு என்பவரை பணியிடை நீக்கம் செய்து, லூ-வை மீண்டும் பணியில் சேர உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இச்சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாக உருமாறியுள்ளது.