1000 மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் பணி நீக்கம் - நடந்தது என்ன?
1000 ஊழியர்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி டெக் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மந்த நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, டெஸ்லா, ஆப்பிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், கூகுள், நெட்பிளிக்ஸ் என அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களும் ஊழியர்களைக் கடந்த 6 மாதங்களாகப் படிப்படியாகப் பணிநீக்கம் செய்து வருகிறது.
1000 மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் பணி நீக்கம்
இந்நிலையில், இந்தியரான சத்ய நாடெல்லா தலைமையில் இயங்கி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் XBOX, EDGE குறிப்பிட்ட பல அணிகளில் இருந்து சுமார் 1000-த்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிறுவனத்தில், லாபம் மற்றும் வருவாய் வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவின் காரணமாகப் இந்த பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விண்டோஸ் லைசென்ஸ் கொண்ட கம்ப்யூட்டர் விற்பனையும் பெரிய அளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களுடைய ஆதங்கத்தை சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.