பெங்களூரு குண்டு வெடிப்பு: சென்னையில் குற்றவாளிகள்..? பெரும் பரபரப்பு!
பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய இரண்டு பேர் சென்னையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
குண்டு வெடிப்பு
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த 1-ம் தேதி மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்த விசாரணையில் திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தியது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டது.
சென்னையில்?
மேலும், இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குண்டு வெடிப்பில் தொடர்புடைய இரண்டு பேர் கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்ததாகவும், பிரபல வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவர்கள் பயன்படுத்திய தொப்பி சென்னை சென்ட்ரலில் வாங்கியுள்ளதும் உறுதியாகியுள்ளது.