சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளில் பயங்கர வெடி விபத்து - 11 பேர் பலி!
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெடி விபத்து
விருதுநகர், ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உடனே தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதேபோல், சிவகாசி அருகே போடு ரெட்டியபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையிலும் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
9 பேர் பலி
பட்டாசு தயாரிக்கும்போது உராய்வு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா, ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.