பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு..!

Tamil nadu Narendra Modi Government Of India Death Krishnagiri
By Thahir Jul 30, 2023 02:02 AM GMT
Report

கிருஷ்ணகிரி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி இரங்கல் 

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது.

பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர், மற்றும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Krishnagiri firecracker accident Prime Minister relief

நிவாரணம் அறிவிப்பு 

விபத்து குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், ‘விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது என்று இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தோருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.