வருமான வரி கட்டுறீங்களா? இதோ முக்கிய தகவல் - மத்திய அரசு அறிவிப்பு!
புதிய வருமான வரி ரிட்டர்ன் படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.
வருமான வரி
இந்திய வருமான வரிச் சட்டத்தின் படி, 5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் ஒவ்வொரு தனிநபரும் , வணிகரும் வருமான வரி ரிட்டன் (IT ரிட்டன்) தாக்கல் செய்ய வேண்டிது அவசியம்.
வரி விதிக்கக்கூடிய வருமானம், வரிப் பொறுப்பு மற்றும் வரி விலக்கு கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் அதன் மூலம் நிவாரணமும் பெற முடியும். வருமான வரி ரிட்டர்ன் (ITR) என்பது நம்முடைய வருமானம் மத்திய அரசின் வருமான வரித் துறைக்கு விவரங்களைத் தாக்கல் செய்வதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் படிவம்.
ரிட்டர்ன் படிவம்
இந்த முறை வழக்கத்தை விடவும் முன்னதாக 2024க்கான படிவங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஐடிஆர் 1 படிவமானது, ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கானது. ஊதியம், வட்டி வருவாய், வேளாண் துறை மூலமாக வருவாய் பெறுபவர்கள் இந்தப் பிரிவில் தாக்கல் செய்ய வேண்டும்.
ஐடிஆர் 4 படிவமானது, ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை தொழில் மூலம் வருவாய் ஈட்டும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கானது. இந்தப் புதிய படிவங்களில், வரிதாரர்கள் தங்கள் அனைத்து வங்கிக் கணக்குகளையும் பண ரசீது விவரங்களையும் கண்டிப்பாக இனி குறிப்பிட வேண்டும்.
குறிப்பாக, முந்தைய ஆண்டில் இந்தியாவில் செயல்பாட்டில் இருந்த வங்கிக் கணக்குகள், அவை எந்த வகை கணக்குகள் உள்ளிட்ட விவரங்களை வரிதாரர்கள் தெரிவித்தாக வேண்டும்.