வருமான வரி தாக்கல் செய்வதற்கான இ-பதிவு தளம் ஜூன் 1 முதல் 6 நாட்கள் இயங்காது..!

incometax wEbsiteblocked 6daysstopped
By Anupriyamkumaresan May 21, 2021 07:18 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

வருமான வரி தாக்கல் செய்வதற்கான இ-பதிவு தளத்தை மாற்ற இருப்பதால் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை தற்போது பயன்பாட்டில் உள்ள இ-பதிவு தளம் இயங்காது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரி தாக்கல் செய்வோர் இதுவரை https://www.incometaxindiaefiling.gov.in என்ற இ-பதிவு தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் ஜூன் 7 முதல் www.incometax.gov.in என்ற புதிய இ-பதிவு தளம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என்றும்,மேலும்,இந்த புதிய தளமானது நவீனமான மற்றும் எளிமையான அனுபவத்தை வரி செலுத்துவோருக்கு வழங்கும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும்,வரி செலுத்துவோர் தங்களுக்கு அவசர பணிகள் ஏதும் இருந்தால் அதனை வரும் ஜூன் 1 ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.