மக்களே உஷார்..கூகுள் பே மூலம் நூதன முறையில் மோசடி - கவனமாக இருக்க போலீஸார் அறிவுரை!
கூகுள் பே பயன்படுத்தி புதிய வகை மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கூகுள் பே
இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸாரின் அறிவுறுத்தல்: தற்போது புதிய வகை மோசடி அரங்கேறி வருகிறது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் வங்கிக் கணக்குக்கு கூகுள் பே (ஜிபே) மூலம் பணம் அனுப்புகிறார்.
பின்னர், அவசரத்தில் வேறு ஒருவருக்கு அனுப்புவதற்கு பதிலாக உங்கள் எண்ணுக்கு அனுப்பிவிட்டேன். எனவே, தவறுதலாக நான் அனுப்பிய பணத்தை, மீண்டும் எனக்கு அதே எண்ணில் அனுப்பி வையுங்கள் என கெஞ்சி கேட்பார்.
போலீஸார் அறிவுரை
நீங்கள் இரக்கப்பட்டு பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, யாராவது உங்களுக்கு தவறாகப் பணம் அனுப்பியிருந்தால் அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் ,
அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு வந்து பணமாக எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள். இந்த மோசடி ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது. எனவே இதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ளவும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.