OLX-ல் மெத்தையை விற்கப் போய், ரூ.68 லட்சத்தை மொத்தமாக இழந்த சோகம் - பலே மோசடி!
OTP link மோசடியால் நபர் ஒருவர் ரூ.68.6 லட்சத்தை பறிகொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண மோசடி
பெங்களூருவை சேர்ந்த 39 வயதான என்ஜினீயர் ஒருவர் தன்னுடைய பழைய மெத்தையை விற்க, புகைப்படங்களுடன் OLX-ல் விளம்பரம் செய்துள்ளார். அதன் விலை 15,000 ரூபாய் என்றும் நிர்ணயித்துள்ளார்.
இதனையடுத்து ரோஹித் மிஸ்ரா என்பவர் அவரை தொடர்பு கொண்டு மெத்தையை வாங்க விருப்பம் தெரிவித்து, பணத்தை டிஜிட்டல் பேமென்ட் ஆப் மூலமாக அனுப்புவதாகக் கூறியுள்ளார். பின்னர் யு.பி.ஐ ஐ.டிக்கு பணத்தை அனுப்ப முடியவில்லை, அதனால் தனது யு.பி.ஐ ஐடிக்கு ரூ.5000 அனுப்புங்கள், அதை நான் திருப்பி தந்து விடுகிறேன் என்று ரோஹித் மிஸ்ரா கூறியுள்ளார்.
அவரை நம்பி விளம்பரம் செய்தவரும் 10,000 ரூபாயாக அனுப்பியுள்ளார். இதனையடுத்து மீண்டும் ரூ. 7,500 அனுப்புமாறும், அதனை ரூ.15,000ஆக திருப்பி அனுப்புவதாகவும் கூறியிருக்கிறார். சரியென இவரும் பணத்தை அனுப்பி உள்ளார்.
ரூ.68.6 லட்சம் இழப்பு
ஆனால் விளம்பரம் செய்தவரின் கணக்கிற்கு ரூ.30,000 வந்துள்ளது. இதனையடுத்து போன் செய்த ரோஹித் மிஸ்ரா, எதிர்பாராத விதமாக ரூ.30,000 அனுப்பி விட்டேன், நான் அனுப்பிய லிங்கை கிளிக் செய்து OTPஐ என்னிடம் தெரிவிப்பதன் மூலம் பணத்தை திருப்பி தருமாறு அவரிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பி விளம்பரம் செய்தவரும் அதனை செய்துள்ளார். அவ்வளவுதான்.. விளம்பரம் செய்தவரின் கணக்கிலிருந்து பணம் படிப்படியாக காணாமல் போகத் தொடங்கியுள்ளது. இதுவரை, இரு முறை ரூ.15 லட்சம் ஒரு முறை ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.68.6 லட்சத்தை அவர் இழந்துள்ளார். அப்போதுதான்
இதனை மோசடி என்று உணர்ந்து கொண்ட அவர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் ஐ.பி.சி பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த சமத்துவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தகியுள்ளது. இதுபோன்ற நூதன மோசடி நபர்களிடம் இருந்து உஷாராக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.