எச்.ஐ.வி தொற்றுக்கு நிரந்தர தீர்வு; புதிய மருந்து கண்டுபிடிப்பு - அசத்திய ஆய்வாளர்கள்!

South Africa HIV Symptoms World
By Swetha Jul 26, 2024 01:00 PM GMT
Report

எச்.ஐ.விக்கு புதிய மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

எச்.ஐ.வி தொற்று 

உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. தொற்றுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எச்.ஐ.வி. தொற்று பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவ ஆய்வாளர்கள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

எச்.ஐ.வி தொற்றுக்கு நிரந்தர தீர்வு; புதிய மருந்து கண்டுபிடிப்பு - அசத்திய ஆய்வாளர்கள்! | New Effective Drug For Hiv Study Conducted

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்காக நடத்திய ஆய்வில் 100 சதவீத செயல்திறனைக் காட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

தடுப்பூசியால் எச்.ஐ.வி நோயை கட்டுப்படுத்தலாம் - முக்கிய தகவல்!

தடுப்பூசியால் எச்.ஐ.வி நோயை கட்டுப்படுத்தலாம் - முக்கிய தகவல்!

புதிய மருந்து

ஆண்டுக்கு 2 முறை ஊசி மூலமாக செலுத்தப்படும் இந்த மருந்து எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விரைவில் குணமடையும் சாத்திய கூறுகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

எச்.ஐ.வி தொற்றுக்கு நிரந்தர தீர்வு; புதிய மருந்து கண்டுபிடிப்பு - அசத்திய ஆய்வாளர்கள்! | New Effective Drug For Hiv Study Conducted

எச்.ஐ.வி.யால் இளம்பருவ பெண்களை கொண்டு நடத்தப்பட்ட 3 கட்ட சோதனையின் மூலம் நிருபணமாகி உள்ளதாக அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார். மேலும், அடுத்தடுத்த ஆராய்ச்சிகளுக்கு பின்னரே சோதனையின் வெற்றியை பொறுத்து இந்த மருந்து விற்பனை சந்தைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.