இனி பெண்கள் மீது கை வைக்கவே நடுங்குவாங்க - மா... அசத்தலான கண்டுபிடிப்பு!
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டலை தடுக்கும் வகையில் புதிய சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாலியல் சீண்டல்
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போகிறது. பச்சிளம் குழந்தை என்று முதியவர்கள் என்று கூட பார்ப்பதில்லை. இதற்கு எதிராக இருக்கும் சட்டங்களையும் கண்டுகொள்ளாமல் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
பெண்களுக்கு உதவுவதற்காகவே 1098 என்ற ஹெல்ப் லைன் நம்பருக்கு தகவல் கொடுக்கும்போது உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். இவ்வாறு பெண்களை காக்கும் பல வசதிகள் உள்ளன.
மா.. புதிய கண்டுபிடிப்பு
இந்நிலையில், சென்னையை சேர்ந்த, வினோதினி சர்மா, டயானா பானிக், சத்யன் சுந்தரராஜன், ஆனந்த் கார்த்திக் ஆகியோர் இணைந்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாலியல் சீண்டலை தடுக்க புதிய சாதனத்தை உருவாக்கி உள்ளனர்.
இது குறித்து பிரபல சேனலுக்கு அவர்கள் அளித்த பேட்டியில் "பெண்கள் பாலியல் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக, அவர்கள் உடலில் அணிந்து கொள்ளும் வகையில், இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, "மா" என்று பெயரிட்டுள்ளோம். இந்த சாதனத்தை அணிந்திருக்கும் பெண், பாலியல் சீண்டலுக்கு உள்ளானால், உடனடியாக அவரது பெற்றோர், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன், கன்ட்ரோல் ரூமுக்கு எச்சரிக்கை தகவல் சென்றுவிடும்.
சம்பந்தப்பட்ட பெண் எங்கிருக்கிறார் என்ற விபரமும் சென்றடையும். பாதிக்கப்படும் பெண் சுய நினைவுடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எச்சரிக்கை தகவல் தானாகவே சென்றுவிடும்.. அதுமட்டுமல்ல, இந்த சாதனம் அலாரம் ஒலி எழுப்பி, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் உதவியை நாட உதவும்.
குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதுதான் நாட்டின் முதல் பாலியல் சீண்டல் தடுப்பு சாதனம்.. இதற்காக மத்திய அரசின் காப்புரிமையை பெற்றிருக்கிறோம். இந்த சாதனத்தை மேலும் நவீனப்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வர, அரசின் உதவி தேவை" என்று கூறியுள்ளனர்.