விவாகரத்து செல்லாது... பெண்கள் மீண்டும் கணவருடன் சேருங்கள்... - தலிபான் அரசு உத்தரவு...!
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆட்சியின்போது பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது என்று தலிபான்கள் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராட்டம்
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பெண்களை பல்கலைக்கழகம் படிக்க அனுமதிப்பதை தலிபான்கள் நிறுத்துவதாகவும், பெண்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றுவதாகவும், தலிபான் அரசுக்கு எதிராக பெண்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து போர்க்கொடி தூக்கினர்.
தலிபான் சர்ச்சை சட்டம்
இந்நிலையில், கடந்த ஆட்சியின்போது பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆட்சியின்போது பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது என்றும், கணவர்களுடன் சேர்ந்து வாழ பெண்களை வலுக்கட்டாயமாக தாலிபான் அரசு அனுப்பி வைக்கும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கணவர் மதுவுக்கு அடிமையாகி இருந்தாலோ, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருந்தாலோ மட்டும் விவாகரத்து செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ளது.
ஏற்கெனவே, ஆப்கனிஸ்தானில் 10ல் 9 பெண்கள் தங்கள் கணவர்களால் கொடுமைக்கு ஆளாவதாக ஐ.நா. தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.