CWC வெங்கடேஷ் பட் உடன் சன் டிவிக்கு தாவிய கோமாளிகள்; புது குக்கிங் ஷோ - இதுதான் காரணம்?
சன் டிவி புது குக்குங் ஷோவில் வெங்கடேஷ் பட் களமிறங்குகிறார்.
புது குக்கிங் ஷோ
விஜய் டிவியின் மெகா ஹிட் ரியாலிட்டி ஷோ ஆன குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் நேற்று முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் பட்டி தொட்டி எங்கும் பரவி வேறலெவல் ஹிட் அடித்தது.காமெடி கலந்த கலகலப்பான குக்கிங் நிகழ்ச்சி என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியால் பலர் தங்களது வாழ்வின் கவலைகளை மறந்து சிரிக்க வைப்பதால் மக்கள் இதற்கு "ஸ்ட்ரெஸ் பஸ்டர்" என்று பெயர் வைத்து அழைப்பதுண்டு. இந்த நிகழ்ச்சிக்கு தூணாக திகழ்ந்து வந்தது அதன் நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் தான். அவர்கள் காம்போவுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
வெற்றிகரமாக நான்கு சீசன்கள் அதே டீம் உடன் பயணித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த ஆண்டு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அந்நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மேன்சன்ஸ் நிறுவனம் வெளியேறியது.
டீமில் விரிசல்?
அதே போல இயக்குனர் பார்த்திவ் மணி, நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் புது டீம் உடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கியது. இதில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக வந்துள்ளார்.
இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் புது குக்கிங் ஷோ ஒன்று விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு டாப் குக்கு டூப் குக்கு என பெயரிட்டு உள்ளனர். இந்த நிகழ்ச்சியை மீடியா மேன்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மேலும், குக் வித் கோமாளியில் பிரபல கோமாளியாக இருந்த மோனிஷா, ஜிபி முத்து, தீபா, பரத் ஆகியோருடன் நடுவர் வெங்கடேஷ் பட்டும் சன் டிவி குக்கிங் ஷோவுக்கு தாவி உள்ளார். இந்த புரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் டீமில் ஏதேனும் பிரச்சனை காரணமாக இருக்கலாமோ என்ற கேள்வி அனைவரது மத்தியில் எழுந்துள்ளது.