ரூ.1000 மகளிர் உரிமை தொகை வழங்குவதில் புதிய மாற்றம் - முக்கிய தகவல்!
மகளிர் உரிமை தொகையில் புதிய மாற்றம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உரிமை தொகை
தமிழ்நாட்டில் தற்பொழுது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு 2 தவணைக்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்து வருகின்றனர்.
இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மாதம் தீபாவளியையொட்டி முன்கூட்டியே வழங்கப்பட்டது. இந்த ரூ.1000 உரிமைத்தொகை குடும்ப தலைவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
புதிய தகவல்
இந்நிலையில், பெண்களுக்கு பயனுள்ளதாக மாற்றும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாத துவக்கத்திலேயே அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து குடும்ப தலைவிகளுக்கு மாத துவக்கத்தில் ரூ.1000 வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மாத துவக்கத்திலேயே குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கினால் அந்த மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்க உபயோகமாக இருக்கும் என்பதால் மாத துவக்கத்திலேயே வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.