தமிழக அமைச்சரவையில் என்ன மாற்றம்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
அமைச்சரவையில் மாற்றம் என்ற தகவல் குறித்து முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை
திமுக அரசு பொறுப்பேற்று ஏற்கனவே மூன்று முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்று மாலை அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 3 மூத்த அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு புதியவர்களுக்கு பொருப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக வெளியான தகவலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். சென்னையில் தரம் உயர்த்தப்பட்ட அவசரகால செயல்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், அமைச்சரவை மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கே தகவல் வரவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.