பிறந்து 6 நாளே ஆன குழந்தையை கழிவறையில் புதைத்த தாய் - நண்பருடன் சேர்ந்து கொடூர செயல்
பச்சிளம் குழந்தையை ஆண் நண்பருடன் சேர்ந்து தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பம்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஆஷா மனோஜ் (35). இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் ஆஷா மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். தான் இந்த குழந்தைக்கு தந்தை இல்லை என மறுத்த அவரது கணவர் மனோஜ் இந்த குழந்தையுடன் வீட்டிற்கு வர வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனையடுத்து கடந்த மாதம் 26 ஆம் தேதி சேர்தலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்த ஆஷாவிற்கு 26-ந்தேதி சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. அந்த மருத்துவமனையில் இருந்து 31 ஆம் தேதி ஆஷா டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
சுகாதாரப் பணியாளர்கள்
இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறந்த விவகாரத்தை அறிந்த சுகாதாரப் பணியாளர்கள், அவரது வீட்டுக்கு சென்று குழந்தையை கேட்டபோது, தன் குழந்தையை, குழந்தை இல்லாத தம்பதிக்கு கொடுத்துவிட்டதாக ஆஷா தெரிவித்துள்ளார்.
இதில் சந்தேகமடைந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் இது பற்றி அவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் ஆஷாவை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது ஆண் நண்பர் ரதீஸுடன் சேர்ந்து குழந்தையை கொன்று கழிப்பறையில் புதைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
மருத்துவமனையில் நான்தான் ஆஷாவின் கணவர் மனோஜ் என மருத்துவமனை ஊழியர்களிடம் கூறி ஆஷாவுடன் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஆஷா மற்றும் ரதீஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.