காந்தி பதில் ராமர் - விரைவில் புதிய 500 ரூபாய் நோட்டு - உண்மை தானா..?
500 ரூபாய் நோட்டில் காந்திக்கு பதிலாக ராமர் பட நோட்டுகள் வெளியிடப்படுவதாக வரும் தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.
500 ரூபாய் நோட்டு
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலை நாட்டின் பிரதமர் மோடி வரும் 22ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
பாஜகவினர் நாடு முழுவதும் ராமர் மயமாகி வருவதாக பேசி வரும் நிலையில், தற்போது செய்தி ஒன்று வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.
உண்மை தானா..?
அந்த செய்தியின் படி, ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்திக்கு பதிலாக ராமர் படம் அச்சிடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுக்கள் வெளியிட உள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதனைப் பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வரும் நிலையில், அந்த புகைப்படம் போலியானது என்ற தகவல் கூடவே வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது என்றும் புதிய நோட்டுகளை வெளியிடுவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியோ அல்லது இந்திய அரசாங்கமோ எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.