உலகின் வலிமையான கரன்சிகள்: அமெரிக்க டாலருக்கே 10-வது இடம் - அப்போ இந்திய ரூபாய்..?
உலகின் வலிமையான 10 கரன்சிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வலிமையான கரன்சி
ஒரு நாடு சர்வதேச அளவில் வர்த்தகம் செய்வதற்கும், பொருளாதார நிலைமையை எடுத்துக்காட்டவும் அந்நாட்டின் அந்நாட்டின் கரன்சிக்கு முக்கிய பங்குள்ளது.
கரன்சியின் வலிமையைப் பொருத்தே, அதன் பொருளாதார ஸ்திரத்தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. கரன்சி வளரும்போது, நாட்டின் பொருளாதாரமும் வளர்கிறது. ஐக்கிய நாடுகள் சபை, 180 நாடுகளின் கரன்சிக்கு தற்போது அங்கீகாரம் அளித்துள்ளது. அதில் சில கரன்சிகள் உலக அளவில் பிரபலமானவை.
இந்த கரன்சிகள் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் உலகின் வலிமையான 10 கரன்சிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், முதலிடத்தில் குவைத் தினார் உள்ளது.
பட்டியல்
ஒரு குவைத் தினார், இந்தியாவின் 270 ரூபாய்க்கும் 3 புள்ளி 25 அமெரிக்க டாலர்களுக்கும் இணையானது. பட்டியலில் இரண்டாவது இடத்தை பஹ்ரைன் தினார் பிடித்துள்ளது.
இது 220.4 ரூபாய்க்கும், 2 புள்ளி 65 அமெரிக்க டாலருக்கும் நிகரானது. 3-வது இடத்தில் ஓமனின் ரியால் உள்ளது. ஒரு ரியால், 215 ரூபாய்-க்கும் 2 புள்ளி 60 டாலருக்கும் இணையானது.
இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஜோர்டானின் தினாரும், ஜிப்ரால்டர் பவுண்டும், பிரிட்டிஷ் பவுண்டும், கேமன் தீவுகளின் டாலரும், சுவிட்சர்லாந்தின் பிராங்க்கும், ஐரோப்பிய யூனியனின் 20 நாடுகள் பயன்படுத்தும் யூரோவும் உள்ளது.
அமெரிக்க டாலர் வலிமையான கரன்சியில் 10வது இடத்தில் உள்ளது. மேலும், இந்திய ரூபாய் 15-வது வலிமையான கரன்சியாக உருவெடுத்துள்ளது. இதில் குவைத் தினார் முதலிடத்தை பிடித்ததற்கு, அந்த நாட்டின் பொருளாதார நிலை, எண்ணெய் இருப்பு மற்றும் வரி இல்லாத அமைப்பே காரணம்.