தமிழ்நாட்டில் புதிதாக 3 நகராட்சிகள் - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Tamil nadu
By Karthikraja Aug 14, 2024 05:37 AM GMT
Report

தமிழ்நாட்டில் 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தபட்டுள்ளது.

புதிய நகராட்சிகள்

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

kn nehru

கடந்த 2023-24ம் ஆண்டு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் மீதான பதிலுரையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு உள்ளிட்ட சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். 

தமிழ்நாட்டில் புதிதாக உதயமாகும் 4 மாநகராட்சி - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாட்டில் புதிதாக உதயமாகும் 4 மாநகராட்சி - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

அரசாணை

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளில் நகராட்சிகளாக தரம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த 3 பேரூராட்சிகளும், நகராட்சிகளாக்குவதற்கான மக்கள் தொகை 30 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்ற அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும், சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூர்த்தி செய்துள்ளது. 

மேலும், சமீபத்தில், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் திருத்தியமைக்கப்பட்டுள்ளதால், அதன்படியும், பிற காரணங்கள் அடிப்படையிலும், இந்த 3 பேரூராட்சிகளின் வரலாறு, சுற்றுலா ஆகியவற்றின் முக்கியத்துவம் வணிகம் போன்ற தொழில் பெருக்கத்தை கருத்தில் கொண்டும் இந்த 3 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக அமைத்து உருவாக்குவதற்கான உத்தேச முடிவு செய்யப்பட்டுள்ளது. 

mk stalin

இதையடுத்து, உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து, நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஆணைகளை ஆகஸ்ட் 12 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்