Monday, Apr 7, 2025

சீரியலில் இவ்வளவு நெருக்கமான காட்சிகள் தேவையா? ப்ரோமோவை திட்டி தீர்த்த ரசிகர்கள்!

Tamil TV Shows
By Swetha a year ago
Report

பிரபல ‘ஆஹா கல்யாணம்’ சீரியல் ப்ரோமவில் வந்த நெருக்கமான கட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நெருக்கமான காட்சிகள் 

தொலைக்காட்சியில் காலகாலமாக சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதற்காகவே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது.

சீரியலில் இவ்வளவு நெருக்கமான காட்சிகள் தேவையா? ப்ரோமோவை திட்டி தீர்த்த ரசிகர்கள்! | Netizens Trolled Aha Kalyanam Serial

இந்நிலையில், சில சேனல்களின் டிஆர்பி-க்காக சின்னத்திரையில் நடிகர்களுக்கு ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைப்பது, பில்டப்புடன் கூடிய காட்சிகளை வைப்பது, முதலிரவு காட்சிகள் என எல்லை மீறிப் போவதாக கடந்த சில வருடங்களாகவே ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

குடும்பத்துடன் பார்க்கும் கூட பல நேரங்களில் ரொமான்ஸ் என்ற பெயரில் இவர்கள் செய்வதை தாங்க முடியவில்லை என ஆதங்கத்தைக் கொட்டி வருகின்றனர்.

கடத்தப்பட்டு தர்மஅடி வாங்கிய சீரியல் நடிகரின் மகன்..? வெளியான அதிர்ச்சி பின்னணி

கடத்தப்பட்டு தர்மஅடி வாங்கிய சீரியல் நடிகரின் மகன்..? வெளியான அதிர்ச்சி பின்னணி

திட்டி தீர்த்த ரசிகர்கள்

அந்த வகையில், விஜய் டிவியில் ‘ஆஹா கல்யாணம்’ சீரியலின் புரோமோவில் வரும் காட்சிகள் முகம்சுழிக்கும் விதமாக இருப்பதை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

சீரியலில் இவ்வளவு நெருக்கமான காட்சிகள் தேவையா? ப்ரோமோவை திட்டி தீர்த்த ரசிகர்கள்! | Netizens Trolled Aha Kalyanam Serial

இந்த சீரியலில் அக்‌ஷயா, விக்ரம் ஸ்ரீ, மெளனிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது வெளியான அந்த ப்ரோமோவில், நாயகனும் நாயகியும் பாத்ரூமிற்குள், “ஒரே நேரத்தில் இருவரும் குளித்தால் தண்ணீர் மிச்சமாகும்” என தண்ணீர் பஞ்சத்திற்கு தீர்வு சொல்லும் விதமாக வசனம் பேசியுள்ளனர்.

அதிலும், “கதாநாயகி பட்டுப்புடவை கட்டிக்கொண்டு ஷவர் குளியல் செய்வதெல்லாம் வேறலெவல்” என்று ரசிகர்கள் கலாய்த்து கமன்ட் போட்டு வருகின்றனர்.