தவெக விருப்ப மனுவில் இருந்த அந்த ஒரு கேள்வி! நெட்டிசன்கள் கிண்டல்
தவெக தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களுக்கான விருப்ப மனுக்களை நேற்று முதல் வழங்கி வருகிறது.
பனையூர் தலைமை அலுவலகத்தில் நேற்று முதல் மனுக்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதிகளவில் தொண்டர்கள் குவிந்ததால் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார்.
மேலும் மனுக்களை பூர்த்தி செய்து பிப்ரவரி 14ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த மனுவில் உள்ள ஒரே ஒரு கேள்வி குறித்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
எட்டு பக்கங்கள் கொண்ட மனுவின் முதல் பக்கத்தில், பெயர், எந்த ஆண்டில் இருந்து உறுப்பினர்களாக இருக்கிறீர்கள் போன்ற அடிப்படையான கேள்விகள் உள்ளன.
மறுப்பக்கத்தில் நீங்கள் போட்டியிட விரும்பம் தொகுதி, அந்த பகுதியில் நீங்கள் வசிக்கிறீர்களா? இங்கு போட்டியிட விரும்புவதற்கான முக்கிய காரணங்கள் குறித்தும், உங்களின் வெற்றி வாய்ப்பு, இதற்கு முன்னதாக சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பங்கு பெற்று இருக்கிறீர்களா போன்ற தகவல்களும் கேட்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து தவெக கழகத்தில் ஆற்றிய பங்குகள், வருமானம், சொத்து விவரம், முகவரி ஆகியவை கேட்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக கழகப் போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்று இருக்கிறீர்களா? ஆம் எனில் அது பற்றிய தகவல்கள் என கேட்கப்பட்டு இருக்கிறது
இந்த கேள்வி தவெக தொண்டர்களுக்கு அதிர்ச்சியளித்த நிலையில், நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
