தவெக அலுவலகம் வராதீங்க: புஸ்ஸி ஆனந்த்
விருப்ப மனு பெறுவதற்காக தவெக தொண்டர்கள் யாரும் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டாம் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள், விருப்ப மனுக்களை தலைமை அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று விநியோகம் தொடங்கியபோதே 50000க்கும் மேற்பட்ட நபர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர், பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியே பரபரப்பானது.
இந்நிலையில் தொண்டர்கள் யாரும் நேரில் வரவேண்டாம் என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் விருப்ப மனு பெற விரும்பும் தொண்டர்கள், ஓன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்த பின்னர், பிப்ரவரி 14ம் திகதிக்குள் நேரிலோ, கொரியர் / தபால் மூலமோ அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
