நயன்தாராவுக்கும், Netflix-க்கும் முற்றிய மோதல் - திருமணத்திற்கு செலவழித்த பணத்தை திருப்பி கேட்டு நோட்டீஸ்..!
நெட்பிளிக்ஸ் விதித்த சில கட்டுப்பாடுகளை விக்னேஷ் சிவன் மீறியதால், திருமண ஒளிபரப்பு உரிம ஒப்பந்தம் தொடர்பாக மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நயன் - விக்கி திருமணம்
நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த மாதம் 9-ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசிஆரில் உள்ள ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த திருமணத்தில் பாலிவுட் நடிகர்கள் சிலர் கலந்து கொண்டனர்.
அதோடு ரஜினிகாந்த், விஜய் சேதுபதி. சூர்யா - ஜோதிகா, அட்லீ, அனிரூத் என கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். திருமணத்துக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டது. விருந்தினர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
நெட்பிளிக்ஸ்
கோலிவுட்டில் இவ்வளவு பிரம்மாண்ட நட்சத்திர ஜோடி திருமணம் இதுதான் என்ற அளவுக்கு சிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது.கோடிக்கணக்கில் செலவு செய்து நடைபெற்ற இந்த திருமண ஒளிபரப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடிகள் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
அதோடு திருமணத்துக்கான செலவையும் நெட்பிளிக்ஸ் ஏற்றதாக பேசப்படுகின்றது. பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்களின் திருமண ஒளிபரப்பு இதுபோல ஓடிடி தளத்தில் வெளியாவது வழக்கமான ஒன்று. சமீபத்தில் கூட கேத்ரினா கைப் திருமணம் இப்படி தான் நடைபெற்றது.
சிக்கல்
இந்நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ்-இல் நயன்தாரா திருமணம் ஒளிபரப்பு செய்யப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கிடையே திருமணம் நிகழ்ந்த முதல் மாதத்தைக் கொண்டாடும் விதமாக, திருமணம் தொடர்பான சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.
ரஜினி ஷாருக்கான் உள்ளிட்டோருடனான மணமக்களின் அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகின.திருமண வீடியோ வெளியாகாத நிலையில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட அந்தப் புகைப்படங்கள் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தின.
நோட்டீஸ்
நெட்ப்ளிக்ஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டது எனவும் அதனால்தான் விக்னேஷ் சிவன் அந்தப் புகைப்படங்களை ரிலீஸ் செய்ய முன்வந்திருக்கிறார் எனவும் பேசப்பட்டது.
ஆனால் சம்பந்தப்பட்ட இரு தரப்பும் இது தொடர்பாக அதிகாரப்பூர்மாக எதையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் இவ்விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது. அதாவது, ஒப்பந்தத்தை ரத்து செய்ய நெட்ப்ளிக்ஸ் முன்வந்திருப்பதாகவும்,
அதன்படி திருமணத்துக்கு தங்கள் தரப்பிலிருந்து செலவிடப்பட்ட 25 கோடி ரூபாய் பணத்தைத் திருப்பிச் செலுத்தும்படி நயன்தாரா தரப்புக்கு அந்நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.