திருமண வீடியோ வெளியீட்டில் சிக்கல்.. கடுப்பில் நயன் - விக்கி!
நெட்பிளிக்ஸ் விதித்த சில கட்டுப்பாடுகளை விக்னேஷ் சிவன் மீறியதாக கூறப்படுகின்றது. இதனால் திருமண வீடியோ வெளியிடுவதில் தாமதம் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன் - விக்கி
நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த மாதம் 9-ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்தில் பாலிவுட் நடிகர்கள் சிலர் கலந்து கொண்டனர்.
அதோடு ரஜினிகாந்த், விஜய் சேதுபதி. சூர்யா - ஜோதிகா, அட்லீ, அனிரூத் என கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். கோடிக்கணக்கில் செலவு செய்து நடைபெற்ற இந்த திருமண ஒளிபரப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடிகள் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
நெட்பிளிக்ஸ்
அதோடு திருமணத்துக்கான செலவையும் நெட்பிளிக்ஸ் ஏற்றதாக பேசப்படுகின்றது.இந்நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ்-இல் நயன்தாரா திருமணம் ஒளிபரப்பு செய்யப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.
நெட்பிளிக்ஸ் உடனான ஒப்பந்தப்படி, நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண கோலத்தில் இருக்கும் ஒரு சில புகைப்படங்களை மட்டுமே சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும்.
அதிருப்தி
அதேபோல திருமணம் முடிந்த கையோடு விக்கி ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், சூர்யா, விஜய் சேதுபதி, ரஜினிகாந்த் திருமணத்தின் போது வந்த புகைப்படங்களை விக்கி வெளியிட்டிருந்தார்.
இதனால் ஒப்பந்தத்தை அவர் மீறியதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடுப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திட்டமிட்டபடி நெட்பிளிக்ஸ் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்புமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதேபோல விக்கி - நயன் ஜோடியும் நெட்பிளிக்ஸ் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகின்றது.