இனி பாஸ்வேர்டு ஷேர் பண்ணக் கூடாது; மீறினால் வழக்கு தான் - Netflix அதிரடி!
நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்டை பகிர்ந்தால், குற்றவியல் வழக்கு பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நெட்ஃபிளிக்ஸ்
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வழிகாடுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "அனுமதியின்றி உங்கள் சமூக ஊடகங்களில் இணையப் படங்களை ஒட்டுவது, அல்லது சந்தா செலுத்தாமல் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்வது, ஹேக் செய்யப்பட்ட ஃபயர் ஸ்டிக்ஸ் அல்லது

பயன்பாடுகள் மூலம் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் அல்லது நேரடி விளையாட்டு நிகழ்வுகளை அணுகுவது பதிப்புரிமை மீறல். அதனால் நீங்கள் ஒரு குற்றம் செய்து இருக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை!
ஏற்கனவே பல்வேறு நபர்களுடன் தங்கள் கடவுச்சொல்லைப் பகிர்ந்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. 222 மில்லியன் குடும்பங்கள் தனது சேவைக்கு பணம் செலுத்தும் நிலையில்,
தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவைக்கு பணம் செலுத்தாத 100 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுடன் கணக்குகள் பகிரப்படுகின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அதன் வருவாயை கடுமையாகப் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.