இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் - சொத்து மதிப்பு தெரியுமா?
கேப்டன் சுப்மன் கில் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சுப்மன் கில்
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில்(25), பொறுப்பேற்றுள்ளார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் 430 ரன்கள் குவித்து,
ஒரே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமும், சதமும் அடித்து உலக அரங்கில் புதிய சாதனை படைத்தார். இவர் BCCI-யின் A தர ஒப்பந்தத்தின் கீழ், கில் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்.
மேலும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம் மற்றும் T20 போட்டிக்கு 3 லட்சம் கட்டணமாக பெறுகிறார். IPLல், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் கில், ஒரு சீசனுக்கு 16.5 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.
சொத்து மதிப்பு
நைக், ஜேபிஎல், கிலெட், சிஇஏடி, டாட்டா கேப்பிட்டல், பாரத்பே மற்றும் மை11சர்க்கிள் உள்ளிட்ட பல பிராண்டுகளுடன் அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த ஒப்பந்தங்கள் மூலம் ஆண்டுக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை கில் சம்பாதிக்கிறார்.
பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் 3.2 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர வீட்டை வைத்துள்ளார். அவரது கார் சேகரிப்பில் ரேஞ்ச் ரோவர் வேலர் (89 லட்சம் ரூபாய்), மெர்சிடிஸ்-பென்ஸ் E350 மற்றும் ஆனந்த் மஹிந்திராவால் பரிசாக வழங்கப்பட்ட மஹிந்திரா தார் ஆகியவை அடங்கும். இவரது சொத்து மதிப்பு, சுமார் 34 கோடி ரூபாயாக