நெப்போலியன் மகன் திருமணம்; டெஸ்ட் டியூப் பேபிக்கு டிரை பண்ணலாம் - டாக்டர் தகவல்!
நெப்போலியன் மகனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் திருமணம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பின், திமுகவில் இணைந்த நெப்போலியன் சட்டமன்றத்திற்கு 2001-லும், நாடாளுமன்றத்திற்கு 2009 ஆம் ஆண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகி அங்கேயே வசித்து வருகிறார். அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என 2 மகன்கள் உள்ளனர். மூத்தவரான தனுஷுக்கு தசை பிடிப்பு சம்பந்தமான அரிய வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தனுஷுக்கும், நெல்லையைச் சேர்ந்த அக்ஷயா என்பவருக்கும் திருமணம் ஜப்பான் நாட்டில் வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. இதில், சரத்குமார், ராதிகா, குஷ்பூ, மீனா, கார்த்திக், பாண்டியராஜன், விதார்த் உள்பட திரைத்துறையினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
குழந்தை பிறப்பு?
இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள மருத்துவர் ஜெய ஸ்ரீ, இந்த நோய் இருப்பவர்களால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது. ஆனால், டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், அதிலும் ஒரு பிரச்சனை இருக்கு.
தனுஷூக்கு இந்த நோய் இருப்பதால், அடுத்த உருவாகக்கூடிய அந்த கருவிற்கும் இந்த நோய் வர வாய்ப்பு இருக்கிறது. இதனால் கரு உருவாகக்கூடிய அந்த விந்தணுவை எடுத்து பரிசோதித்தாலே, கரு முட்டையில் என்ன நோய் வரும் என்பது தெரிந்து விடும் எனத் தெரிவித்துள்ளார்.