எனக்கா ரெட் கார்டு.. வெளியேற்றப்பட்ட நாளிலேயே காதலியை கரம்பிடித்த பிக்பாஸ் பிரபலம்!
பிக் பாஸ் போட்டியாளரான பிரதீப் ஆண்டனி தனது காதலியை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ரெட் கார்டு..
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ரீயலிட்டி ஷோதான் பிக் பாஸ். இதுவரை 7 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது எட்டாவது சீசன் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி சிறப்பாக ஒடிக்கொண்டிருக்கிறது எனலாம்.
இந்த நிகழ்ச்சியில் இருந்து வெற்றி பெற்று பிரபலமானவர்களைவிட சர்ச்சையில் சிக்கி பிரபலமானவர்கள்தான் அதிகம். அந்த வகையில் கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு ரெட் கார்டு வாங்கி வெளியேறிய போட்டியாளர் தான் பிரதீப் ஆண்டனி.
அந்த சீசனில் மிகவும் டஃப் ஆன போட்டியாளராகவும் பிரதீப் திகழ்ந்தார். சக போட்டியாளர்கள் அவர் மீது பல குற்றசாட்டுகளை முன்வைத்து அவர் வெளியேற்றப்பட்டது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில், பிரதீப் ஆண்டனிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.
பிக்பாஸ் பிரபலம்
அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பூஜாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்,
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தான் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். தற்போது அதே வாரத்தில் அதுவும் கமலின் பிறந்தநாள் அன்று பிரதீப் கல்யாணம் செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்த்துவ முறைப்படி பிரதீப் ஆண்டனி - பூஜா ஜோடியின் திருமணம் நடைபெற்றதில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தியும் கலந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.