உலகிலேயே அழகான கையெழுத்து இதுதானாம் - மிரளவைத்த 16 வயது சிறுமி!
16 வயது சிறுமியின் கையெழுத்து உலகிலேயே அழகானது என்ற பெருமை பெற்றுள்ளது.
கையெழுத்து
நேபாளத்தைச் சேர்ந்தவர் பிரகிருதி மல்லா(16). தனது 14 வயதில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, அவரது கையெழுத்தில் உருவான கடிதத்தை பார்த்து பலரும் வியந்துப்போனர்.
இந்நிலையில், இந்த மாணவி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 51வது ஆண்டு ஒற்றுமை தினத்தை ( UAE 51 Spirit of the Union) முன்னிட்டு வாழ்த்துக் கடிதம் எழுதினார்.
விருது
விழாவின் போது தனிப்பட்ட முறையில் கடிதத்தை தூதரகத்திற்கு வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அரபு எமிரேட்ஸ் தூதரகம் வெளியிட்ட ட்வீட்டில் உள்ள கடிதம் மிகப்பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அதில் உலகிலேயே இது மிக அழகான கையெழுத்து எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவருக்கு விருதையும் வழங்கியுள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது பெரும் அளவில் வைரலாகி வருகிறது.
The talented Nepali young girl Prakriti Malla,the awarded Best Hand Writing in the world has written a congratulation letter to the Leadership of UAE and its people on the occasion of the UAE 51 Spirit of the Union,and hand it over to the embassy during the ceremony #Nepal #UAE pic.twitter.com/1PsdOikqzf
— UAE Embassy Nepal (@UAEEmbNepal) December 4, 2022

viral video: கோபத்துடன் படமெடுத்து நின்ற நாகம்... அசால்ட்டாக கையில் தூக்கிய நபருக்கு என்ன நடந்தது? Manithan
