இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் - மத்திய அரசு அறிவுறுத்தல்!

India Nepal Social Media
By Sumathi Sep 10, 2025 11:38 AM GMT
Report

இந்தியர்கள் யாரும் நேபாளத்திற்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பதற்றமான சூழ்நிலை

நேபாளத்தில் இன்ஸ்டா, ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 வகையான சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு கடந்த 4ஆம் தேதி உத்தரவிட்டது.

nepal

தொடர்ந்து 26 சமூக வலைதளங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டது. அரசின் இந்த உத்தரவுக்கு அந்நாட்டின் மக்களும், குறிப்பாக இளைஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பாஜக நுழைஞ்சா அந்த மாநிலமே உருப்படாது - ப.சிதம்பரம் தாக்கு!

பாஜக நுழைஞ்சா அந்த மாநிலமே உருப்படாது - ப.சிதம்பரம் தாக்கு!

மத்திய அரசு அறிவுரை

மேலும், இளைஞர்கள் நேபாள அரசில் ஊழல் மிகுந்துள்ளதாகவும், கூறி அரசுக்கு எதிராக போராடினர். அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதனையடுத்து காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்ட நிலையில்,

இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் - மத்திய அரசு அறிவுறுத்தல்! | Nepal Safety Alert For Indians Central Govt

இந்தியாவில் இருந்து நேபாளம் செல்லக் கூட்டிய ஏர் இண்டியா, இண்டிகோ, நேபாள் ஏர்லைன் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம்.

நேபாளத்தில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.