சமூக வலைதள தடை; வன்முறையாக மாறிய போராட்டம் - 20 பேர் பலி!
வன்முறையாக மாறிய மோதலில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
வெடித்த போராட்டம்
நேபாளத்தில் இன்ஸ்டா, ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 வகையான சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு கடந்த 4ஆம் தேதி உத்தரவிட்டது.
தொடர்ந்து 26 சமூக வலைதளங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டது. அரசின் இந்த உத்தரவுக்கு அந்நாட்டின் மக்களும், குறிப்பாக இளைஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், காத்மண்டுவில் கூடியுள்ள இளைஞர்கள் நேபாள அரசில் ஊழல் மிகுந்துள்ளதாகவும், கூறி அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் தற்போது போலீஸாருக்கும் போராட்டாக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு தற்போது பெரும் மோதலாக வெடித்துள்ளது.
20 பேர் பலி
எனவே போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், காத்மண்டுவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூடவும், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ள அந்நாட்டு அரசு, சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
டெலிகிராம் ஆன்லைன் மோசடி மற்றும் பணமோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் காரணம் காட்டி அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.