அடிச்சது சிக்ஸர்.. ஆனது ரன் அவுட்; மின்னல் வேகத்தில் சம்பவம் - வைரலாகும் Video!

Cricket Viral Video Nepal National Cricket Team Sports
By Jiyath Mar 05, 2024 09:00 AM GMT
Report

நேபாளம்-நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடந்த விறுவிறுப்பான ரன் அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நேபாளம்-நெதர்லாந்து

நேபாளம், நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நேபாள நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 5-வது போட்டியில் நேபாளம்- நெதர்லாந்து அணிகள் மோதின.

அடிச்சது சிக்ஸர்.. ஆனது ரன் அவுட்; மின்னல் வேகத்தில் சம்பவம் - வைரலாகும் Video! | Nepal Cricketers Effort To Run Out

முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 120 ரன்கள் எடுத்தது நிலையில், அடுத்து களமிறங்கிய நேபாளம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரின் ஒரு பந்தை மெர்வ் தூக்கி அடித்தார்.

கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா காலமானார்; ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன நடந்தது?

கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா காலமானார்; ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன நடந்தது?

வைரல் வீடியோ 

அதை சிக்ஸர் என்றே அனைவரும் கருதிய நிலையில், நேபாள வீரர் குஷால் புர்டெல் மின்னல் வேகத்தில் பாய்ந்து பவு ண்டரி லைனில் பந்தை தடுத்தார். பின்னர் உள்ளே விழுந்த பந்தை மீண்டும் எடுத்து விக்கெட் கீப்பரை நோக்கி வீசினார்.

அடிச்சது சிக்ஸர்.. ஆனது ரன் அவுட்; மின்னல் வேகத்தில் சம்பவம் - வைரலாகும் Video! | Nepal Cricketers Effort To Run Out

அதற்குள் முதல் ரன் எடுத்த மெர்வ், இரண்டாவது ரன் எடுக்க முயற்சிக்கவில்லை. மறுமுனையிலிருந்து இரண்டாவது ரன் எடுக்க வந்த விவான் கிங்மவை கீப்பர் ரன் அவுட் செய்தார். இந்த ரன்-அவுட் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.