யுவராஜின் 6 சிக்ஸர்கள்; பிரபல கிரிக்கெட் வீரரின் தற்போதைய பரிதாமா நிலைமை - என்ன நடந்தது?

Cricket United Kingdom England Cricket Team
By Jiyath Sep 10, 2023 11:02 AM GMT
Report

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ பிளின்டாஃப் விபத்திற்கு பின்னர் முதன்முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளார்.

ஆண்ட்ரூ பிளின்டாஃப்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. போட்டிகளுக்கு தயாராகும் விதமாக நியூசிலாந்து அணி இங்கிலாத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடி வருகிறது.

யுவராஜின் 6 சிக்ஸர்கள்; பிரபல கிரிக்கெட் வீரரின் தற்போதைய பரிதாமா நிலைமை - என்ன நடந்தது? | Andrew Flintoff Makes First Appearance I

இதில் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாஃப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அந்த விபத்திற்கு பின்னர் முதன்முறையாக தற்போது தான் அவர் பொதுவெளியில் தோன்றியுள்ளார். அவரின் மூக்கு, வாய்ப்பகுதிகளில் இன்னமும் காயங்களில் தழும்பு அப்படியே தெரிகிறது.

யுவராஜின் 6 சிக்ஸர்கள்; பிரபல கிரிக்கெட் வீரரின் தற்போதைய பரிதாமா நிலைமை - என்ன நடந்தது? | Andrew Flintoff Makes First Appearance I

மேலும், பிளிண்டாஃபின் முகமே மொத்தமாக மாறி, வேறு விதமாக காட்சியளிக்கிறது. அடையாளம் காண முடியாத அளவிற்கு அவரது முக அமைப்பு மாற்றம் கண்டுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர். விரைவில் அவர் பூரணமாக குணமடைய வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

யுவராஜின் 6 சிக்ஸர்கள்

இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஆண்ட்ரூ பிளின்டாஃப் இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்ட் மற்றும் 141 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

யுவராஜின் 6 சிக்ஸர்கள்; பிரபல கிரிக்கெட் வீரரின் தற்போதைய பரிதாமா நிலைமை - என்ன நடந்தது? | Andrew Flintoff Makes First Appearance I

2007ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை தொடரின் போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான போட்டி ஒன்றில் யுவராஜ் சிங் மற்றும் பிளின்ட் ஆஃப் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, வீசப்பட்ட ஓவரில் தான் 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசி யுவராஜ் சிங் உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.