17 சிறுமிக்கு பாலியல் தொல்லை - சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர் - குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம்
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல கிரிக்கெட் வீரரை குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கிரிக்கெட் வீரர்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஐபில் போட்டிகளில் விளையாடி இருப்பவர் நேபாள நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேன். ஐபில் விளையாடிய முதல் நேபாள வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள இவர், இதுவரை நேபாள அணிக்காக 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
உலகெங்கிலும் நடைபெற்று வரும் பல லீக் போட்டிகளிலும் விளையாடி வரும் சந்தீப், பாலியல் புகார் ஒன்றில் சிக்கியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் புகார்
கடந்த ஆகஸ்ட் 21-ந்தேதி காத்மாண்டு ஓட்டல் ஒன்றில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 17 வயது சிறுமி ஒருவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த வழக்கில் கைதான சந்தீப் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார்.
பரபரப்பான வழக்கை தொடர்ந்து, நேபாள கிரிக்கெட் வாரியம் சந்தீப் லமிச்சேனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கில் சந்தீப்பை குற்றவாளி என நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், இவ்வழக்கில் அவருக்கு வழங்கப்படவுள்ள தண்டனை வரும் ஜனவரி 10-ஆம் தெரிவிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.