மணமகன்,மணமகள் தேவை..வைரலாகும் போஸ்டர்; ஒட்டியது யார்? உடைந்த சஸ்பென்ஸ்!

Tamil nadu Zee Tamil Tamil TV Serials Tamil TV Shows
By Swetha Jun 28, 2024 11:30 AM GMT
Report

திருமணத்திற்கு மாப்பிள்ளை,பெண் தேவை என்ற வரிகளுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பேசுபொருளாகியுள்ளது.

வைரலாகும் போஸ்டர்

அந்த காலம் முதல் தற்போது வரை போஸ்டர் ஒட்டும் பழக்கம் தமிழகத்தில் பரவலாக இருந்து வருகிறது. ஒரு விஷயத்தை விளம்பரப்படுத்த இப்படி சுவரொட்டிகள் ஒட்டப்படும். எனவே மக்களுக்கு அது குறித்த விழிப்புணர்வு ஏற்பாடு என்று ஒட்டப்படுகிறது.

மணமகன்,மணமகள் தேவை..வைரலாகும் போஸ்டர்; ஒட்டியது யார்? உடைந்த சஸ்பென்ஸ்! | Nenjathai Killadhe Serial Promotion Poster Viral

அண்மையில் கூட நீங்க ரோடு ராஜாவா என்ற பெயரில் தமிழக காவல்துறை சார்பில் போஸ்டர்கள் வைரலானது. இது பொதுமக்களிடையே சஸ்பென்ஸை ஏற்படுத்தியது. பிறகு தான் சாலை விதிகளை மீற கூடாது என்ற விழிப்புணர்வுக்கான விளம்பரம் என்பது தெரிய வந்தது.

அந்த வகையில், கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேவை, திருமணத்திற்கு பெண் தேவை என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. எதற்கு இந்த போஸ்டர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாக்கியலட்சுமி கோபியின் “காத்து வாக்குல ரெண்டு காதல்” - வைரலாகும் போஸ்டர்

பாக்கியலட்சுமி கோபியின் “காத்து வாக்குல ரெண்டு காதல்” - வைரலாகும் போஸ்டர்

உடைந்த சஸ்பென்ஸ்

மேலும் அந்த போஸ்டரில் QR கோட் ஒன்றும் கொடுக்கப்பட்டு இருக்க அதை ஸ்கேன் செய்து உள்நுழைந்தால் ஸ்கேன் செய்தமைக்கு நன்றி. மாப்பிள்ளையின் பெயர் சிவாஜி, தி பாஸ். வயது 42 எனவும் பெண்ணின் பெயர் மதுமிதா, வயது 35 எனவும் மணப்பெண் மற்றும் மணமகனின் முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும்

மணமகன்,மணமகள் தேவை..வைரலாகும் போஸ்டர்; ஒட்டியது யார்? உடைந்த சஸ்பென்ஸ்! | Nenjathai Killadhe Serial Promotion Poster Viral

என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. அதாவது, இது ஜீ தமிழில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நெஞ்சத்தை கிள்ளாதே என்ற புத்தம புதிய சீரியலுக்கான ப்ரமோஷன் போஸ்டர் என தெரியவந்துள்ளது.

ஹீரோவாக ஜெய் ஆகாஷ் தான் 45 வயதான கௌதம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உணவு பிரியரான அவருக்கு உடல் எடை கூடி பெண் கிடைக்காமல் இருக்கிறது. அதேபோல் மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் 35 வயது நிரம்பிய பெண்ணாக ரேஷ்மா நடிக்கிறார் என அறிவித்துள்ளனர்.

ஆகையால், இவர்களுக்கு தான் மணப்பெண், மணமகன் தேவை.. வாங்க சேர்ந்து தேடலாம் என புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த விளைபரத்துக்கு பலரும் இதுக்கா இவ்வளவு பில்டப்? என்று ஒரு சிலரும், இதெல்லாம் பார்த்தா சீரியல் தரமா இருக்கும் போலயே என சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.