தொழிலாளியை வெட்டிக்கொன்ற ரவுடி - போலீஸார் சுட்டுப்பிடித்ததில் உயிரிழப்பு!
போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு
விருதுநகர், சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி(42). இவர், கல்லிடைக்குறிச்சி வெங்கடேஷ் உள்ளிட்ட தொழிலாளர்கள் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குழி சுடலை கோயில் அருகே சாலை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குவந்த ரவுடிகள் பேச்சித்துரை (23), சந்துரு (23) ஆகியோர் கருப்பசாமி, வெங்கடேஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதில், கருப்பசாமி உயிரிழந்தார்.
பின் அந்த ரவுடிகள் அப்பகுதியில் வந்த காரையும், அரசுப் பேருந்தையும் வழிமறித்து ரகளை செய்ததுடன், கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர். அதின் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸாரை கண்டதும் ரவுடிகள் தப்பியோடினர்.
ரவுடி உயிழப்பு
அப்போது, போலீஸ்காரர் செந்தில்குமார் (35) என்பவரை ரவுடிகள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். உடனே, போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி பேச்சித்துரையை பிடித்தனர்.
ஆனால், சந்துரு தப்பியோடிவிட்டார். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.