நெல்லை கண்னன் மறைவு - வைகோ நேரில் சென்று மரியாதை
மறைந்த பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணனின் உடலுக்கு வைகோ நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
நெல்லை கண்னன் மறைவு
தமிழறிஞரும், இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார்.
அவருக்கு வயது 77. காமராஜர், கண்னதாசன் உள்ளிட்ட ஆளுமைகளுடன் நெருன்ஹ்கி பழகியவர்.
1970 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மேடைகளில் இவரது தமிழ் கொடி கட்டி பறந்தது.
வைகோ மரியாதை
இந்நிலையில், திருநெல்வேலியில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை கண்ணன் உயிரிழந்தார்.
இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்களை தெரிவித்து வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்ரு அஞ்சலி செலுத்தினார்.