அடங்காத பிரச்சனை; திமுக கவுன்சிலர்கள் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் - துரைமுருகன் அறிவிப்பு!
கவுன்சிலர்கள் உட்பட 4 பேர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கட்சிக்கு அவப்பெயர்
நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. பொதுமக்கள் குறைத்தீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக ஆளும் கவுன்சிலர்கள் 20 பேர் வந்திருந்தனர்.
முகாமில் மேயர் துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இல்லாததன் காரணமாக ஆத்திரமடைந்த அவர்கள் மாநகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்
குடிநீர், சாலை உட்பட அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதற்கு மேயர் முன்னுரிமை கொடுப்பதில்லை குற்றம் சாட்டினர். இந்நிலையில், நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேர் உட்பட 4 பேர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் விடுத்துள்ள அறிவிப்பில், கவுன்சிலர்கள் பவுல்ராஜ், மன்சூர், ரவீந்தர் மற்றும் மாநகர பிரதிநிதி சுண்ணாம்பு மணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.
கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.