நீட் பயிற்சியில் மாணவி - ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை!
தண்டவாளத்தில் தலையை வைத்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
நீட் பயிற்சி
கடலூர், நெய்வேலி அருகே உள்ள ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் உத்திராபதி. என்எல்சி ஒப்பந்த தொழிலாளி. இவரது மகள் நிஷா(18). இவர் கடந்த ஆண்டு நடந்த பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் 399 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.
அதன்பின், நீட் தேர்வு எழுதுவதற்காக தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து முழு நேரமாக பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் வகுப்பிற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார்.
தற்கொலை
அப்போது திடீரென பெங்களூரில் இருந்து கடலூர் நோக்கி ரயில் வந்தபோது, நிஷா தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துள்ளார். இதில் அவரது உடல் சிதைந்து போனது. இதுகுறித்து அறிந்தவுடன் உடனே சம்பவ இடம் விரைந்த ரயில்வே போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் நீட் பயிற்சி மையத்தில் நடந்த மாதிரி தேர்வில் நிஷா குறைவான மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. அதனால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.