கர்ப்பமான 21 வயது மாணவி தற்கொலை - உடலை கிணற்றில் வீசி நாடகமாடிய காதலன்!
கர்ப்பமான நிலையில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி கர்ப்பம்
ஈரோடு, நாயக்கன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா (21). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவரை காணவில்லை என அவரது தாய் புகாரளித்துள்ளார்.
தொடர்ந்து, விவசாய தோட்டத்து கிணற்றில் மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் உடலில் ரத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். அதனையடுத்த பிரேத பரிசோதனையில் தற்கொலை என்பது தெரியவந்தது. விசாரணையில், கொங்கர்பாளையத்தை சேர்ந்தவர் லோகேஷ்(23). இருவரும் ஒரே கல்லூரியில் படித்து காதலித்து வந்துள்ளனர்.
தற்கொலை
இதில் ஸ்வேதா கர்ப்பமாகியுள்ளார். அதனால் திருமணம் செய்ய காதலனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் காதலன் அதற்கு மறுத்துள்ளார். உடனே கருவை கலைக்க முடிவு செய்த மாணவி மருத்துவமனையை அனுகியதில் அங்கி கலைக்க மறுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது சாப்பாடு வாங்க லோகேஷ் சென்றிருந்த நிலையில், ஸ்வேதா துப்பாட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திரும்பி வந்து பார்த்து அதிர்ச்சியடைந்த காதலன் இது வெளியே தெரிந்தால் பிரச்சணையாகிவிடும் என எண்ணி ஸ்வேதாவின் உடலை ஒரு சாக்கு மூட்டையில் போட்டு கட்டி வைத்து விவசாய தோட்டத்து கிணற்றுக்கு சென்று வீசிவிட்டு வீடு திரும்பி உள்ளார். அதன் அடிப்படையில், தற்போது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.