'நீட்' பயிற்சி பெற பணம் இல்லாததால்.. மாணவி எடுத்த வீபரித முடிவு!
'நீட்' பயிற்சிக்குப் பணம் இல்லாததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
'நீட்' பயிற்சி
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் .இவர் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் முத்துலட்சுமி (வயது18). 12-ம் வகுப்பு முடித்த நிலையில் கடந்த ஓராண்டாக அவர் நெல்லையில் உள்ள தனியார் பயிற்சி மைய விடுதியில் தங்கியிருந்து 'நீட்' தேர்வுக்குப் பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில் விடுதியில் தங்கிப் படிக்கச் செலவு அதிகமானதால் மணிகண்டன், முத்துலட்சுமியிடம் வீட்டிலிருந்து பயிற்சி வகுப்புக்குச் செல்லுமாறு கூறினார். அதன்படி, அவரும் வீட்டிலிருந்தபடி தினமும் அதிகாலை 6.30 மணிக்குப் புறப்பட்டு பயிற்சி வகுப்புக்குச் சென்று வந்தார்.
ஆனால் தனது வீட்டிலிருந்து பயிற்சிக்குச் செல்வதற்குக் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறிமீண்டும் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும் என்று முத்துலட்சுமி தனது தந்தையிடம் தெரிவித்தார். ஆனால் அதற்கு மணிகண்டன் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் மன உளைச்சல் அடைந்த முத்துலட்சுமி நேற்று காலையில் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு முத்துலட்சுமி சென்றுள்ளார். நேடும் நேரம்,ஆகியும் அறையை விட்டு முத்துலட்சுமி வெளியேவராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், முத்துலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.