நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; ஒப்புக்கொண்ட மத்திய அரசு - உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு!

India NEET
By Swetha Jul 08, 2024 11:11 AM GMT
Report

நீட் வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

நீட் வினாத்தாள்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் மாதம் வெளியானது. நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; ஒப்புக்கொண்ட மத்திய அரசு - உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு! | Neet Paper Leaked Sc Asks Question

வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், தேர்வு தொடர்பான 38 மனுக்களும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நீட் முறைக்கேடு: எரிந்த நிலையில் வினாத்தாள்கள், சிக்கிய காசோலைகள் - திடுக் தகவல்

நீட் முறைக்கேடு: எரிந்த நிலையில் வினாத்தாள்கள், சிக்கிய காசோலைகள் - திடுக் தகவல்

கசிவு விவகாரம்

அப்போது, நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்துள்ளது, பள்ளிகளில் பிரிண்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது. மே 4-ல் டெலிகிராம் சேனலில் நீட்வினாத்தாள் மற்றும் அதன் விடைகளுடனான வீடியோ வெளியிடப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; ஒப்புக்கொண்ட மத்திய அரசு - உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு! | Neet Paper Leaked Sc Asks Question

பிறகு, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த மத்திய அரசு, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கசிவால் பலனடைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.