ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா..!

Government Of India
By Thahir Jun 18, 2022 07:50 PM GMT
Report

ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.

தங்கம் வென்று அசத்தல் 

பின்லாந்தில் ஈட்டி எறிதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

அவர் முதல் முயற்சியில் 86.69 மீட்டர் தூரம் ஈட்டி வீசினார். இந்த இலக்கை பின்னர் வந்த பிற போட்டியாளர்களால் முறியடிக்க முடியவில்லை.

ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா..! | Neeraj Chopra Wins Gold In Javelin Throw

2வது முயற்சியில் சோப்ரா தவறு செய்தார். 3வது முயற்சியின்போது அவர் தவறி கீழே விழுந்தார். அது பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

எனினும் அதில் இருந்து மீண்டு, அவர் காயமின்றி எழுந்து சென்றார். போட்டியின்போது தொடர் மழை பெய்ததால் ஈட்டி எறியும் வீரர்கள் அனைவருக்கும் சற்று சிரமம் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் அதிக தூரம் ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ராவுக்கு தங்கம் கிடைத்தது.