டென்னிஸ் வீராங்கனையை கரம்பிடித்த நீரஜ் சோப்ரா; எப்படி தொடர்பு - யார் அந்த ஹிமானி?
நீரஜ் சோப்ரா டென்னிஸ் வீராங்கனை ஹிமானியை திருமணம் செய்துள்ளார்.
நீரஜ் சோப்ரா
இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று கொடுத்தவர் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் ஹிமானி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
திருமணம் மிகவும் ரகசியமாக, குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்வாக நடந்து முடிந்துந்துள்ளது. இந்நிலையில், நீரஜ் தனது சமூக வலைதள பக்கங்களில் திருமண நிகழ்வின் புகைப்படங்களை வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
குவியும் வாழ்த்துகள்
ஹிமானி, ஹரியானா பானிபட்டை சேர்ந்தவர். அமெரிக்காவில் படித்தவர். டென்னிஸ் வீராங்கனையாக இருந்தவர் என்பதோடு அவர் விளையாட்டு மேலாண்மை குறித்த இளங்கலை படிப்பை படித்துள்ளார்.
जीवन के नए अध्याय की शुरुआत अपने परिवार के साथ की। 🙏
— Neeraj Chopra (@Neeraj_chopra1) January 19, 2025
Grateful for every blessing that brought us to this moment together. Bound by love, happily ever after.
नीरज ♥️ हिमानी pic.twitter.com/OU9RM5w2o8
தற்போது அமெரிக்காவில் டென்னிஸ் விளையாட்டு மேலாண்மை சார்ந்த பணியில் இருக்கிறார். 2021ல், ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் நீரஜ்.
தொடர்ந்து, பாரிஸ் oலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.