ஆபாசமாக கேள்வி கேட்டவருக்கு... - தக்க பதிலடி கொடுத்த நீலிமா ராணி - வைரலாகும் டுவிட்
நீலிமா ராணி
கமலின் தேவர் மகன் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன் பின்னர் மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நீலிமா ராணி இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லி வேடத்தில் பின்னிபெடலெடுத்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே ஒரு பெண் பிள்ளை உள்ளது. இதனையடுத்து, கடந்த ஜனவரி 5ம் தேதி தான் 2-வது பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகை நீலிமா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார்.
தக்க பதிலடி கொடுத்த நீலிமா
இந்நிலையில், நெட்டிசன் ஒருவர், உங்க உள்ளாடை சைஸ் என்ன என்று நீலிமா ராணியிடம் கேட்டுள்ளார். அதற்கு நீலிமா ராணி, “நான் ஏன் உனக்கு சொல்ல வேண்டும். நீ விற்க போறியா?” என பதிலடி கொடுத்துள்ளார். மற்றொருவர் செக்ஸ் பற்றி கொச்சையான கேள்வியை கேட்டுள்ளார்.
இந்த முட்டாளுக்கு நான் எப்படி பதில் அளிப்பது என பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இவ்வாறு ஆபாசமாக கேள்வி கேட்ட நெட்டிசன்களை நீலிமாவின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.