நடிகை நீலிமாவுக்கு பெண் குழந்தை பிறந்தது - குவியும் வாழ்த்து
கமலின் தேவர் மகன் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன் பின்னர் மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நீலிமா ராணி இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லி வேடத்தில் பின்னிபெடலெடுத்து வருகிறார்.
இந்நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நடிகை நீலிமா இசைக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு ஏற்கெனவே ஒரு பெண் பிள்ளை உள்ளது.
இதனையடுத்து, கடந்த ஜனவரி 5ம் தேதி தான் 2-வது பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகை நீலிமா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, நடிகை நீலிமாவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை IBC Tamil