புதிய இந்தியாவை உருவாக்க - இது நிச்சயம் வேண்டும் - நிர்வாகிகளுக்கு உதயநிதி அறிவுரை
வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் வெற்றி பெறுவதும் அவசியம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக மிகவும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளை குறித்து வைத்து அக்கட்சி மும்முரம் காட்டி வருகின்றது.
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய ஒன்றியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கவுள்ள அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் #INDIA கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய, கழகத்தின் நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடத்தினோம்.
புதுச்சேரி - காரைக்கால் மாநில அமைப்பாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - புதுவை மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றக் கூடிய கழக நிர்வாகிகள் - உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களிடம், மக்களவைத் தேர்தல் தொடர்பான புதுச்சேரியின் அரசியல் சூழல்களை கேட்டறிந்தோம்.
இந்திய ஒன்றியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கவுள்ள அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் #INDIA கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய, கழகத்தின் நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில்… pic.twitter.com/BbVN6IwGFv
— Udhay (@Udhaystalin) February 5, 2024
“நாடும் நமதே, நாற்பதும் நமதே என்று நாம் சொல்கிற அந்த வார்த்தை புதுவையில் பெறுகிற வெற்றியால் தான் முழுமையடையும். எனவே, உண்மையிலேயே புதிய இந்தியாவை உருவாக்க புதுச்சேரியின் வெற்றி அவசியம்,” என்று உரையாற்றினோம்.