பட்ஜெட் 2024: வல்லரசாக்குவோம் என்று அல்வா கிண்டியுள்ளார்கள் - உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin Tamil nadu DMK
By Jiyath Feb 02, 2024 03:35 AM GMT
Report

இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பட்ஜெட் 2024: வல்லரசாக்குவோம் என்று அல்வா கிண்டியுள்ளார்கள் - உதயநிதி ஸ்டாலின்! | Udhayanidhi Stalin X Post About Budget 2024

இந்த இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள்.

எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஊழல், குடும்ப ஆட்சி நடத்தும் திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம் - அண்ணாமலை!

ஊழல், குடும்ப ஆட்சி நடத்தும் திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம் - அண்ணாமலை!

வீழ்த்துவது உறுதி

இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க - பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த - மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்.

பட்ஜெட் 2024: வல்லரசாக்குவோம் என்று அல்வா கிண்டியுள்ளார்கள் - உதயநிதி ஸ்டாலின்! | Udhayanidhi Stalin X Post About Budget 2024

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை.

இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி" என்று பதிவிட்டுள்ளார்.