தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் - அதற்காகவே கூட்டணி - அன்புமணி ராமதாஸ்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது பாமக.
கூட்டணி
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது பாமக. நேற்று தைலாபுரத்தில் இதற்கான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
கூட்டணியில் பாமாவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
60 ஆண்டு ஆட்சி...
கூட்டணி குறித்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசியது வருமாறு, பாமக கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகின்றது. தமிழகத்தில் வருகின்ற மக்களவைத் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மோடியின் நல்லாட்சி தொடர, நாட்டின் நலன் கருதி, தமிழகத்தில் மாற்றம் வர இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று குறிப்பிட்ட ராமதாஸ், கடந்த 60 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது வெறுப்பான சூழல் உள்ளது என குறிப்பிட்டு, மக்களுக்கு மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக உள்ளது என்று கூறினார்.
அதனை பூர்த்தி செய்யவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அன்புமணி, இந்த கூட்டணி தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படுவார் என உறுதிபட கூறினார்.